மெக்சிகோவை தாக்கிவிட்டு அமெரிக்காவில் கரையை கடந்த ஹிலாரி சூறாவாளியால் கலிபோர்னியா, நெவாடா போன்ற வறண்ட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்தது.
பாலைவனங்களால் சூழப்பட்ட சுற்றுலா நகரான பால்ம் ஸ்பிரிங்ஸில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்யும் மழையை விட கடந்த இரண்டு நாட்களில் அதிக மழை பெய்ததாக கூறப்படுகிறது.
சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுவருகின்றனர்.
பசிபிக் பெருங்கடலில் எழும்பிய ராட்சத அலைகளில் அலைசறுக்கு செய்வதற்காக இளைஞர்கள் ஹண்டிங்டன் கடற்கரைக்கு படையெடுத்தனர்.