உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னிஹிவ் நகரின் திரையரங்கின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 15 குழந்தைகள் உள்ளிட்ட 129 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏவுகணை வீச்சில் ஒரு பிரதான சதுக்கம் மற்றும் பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றும் சேதமடைந்தன.
தேவாலயம் ஒன்றில் விடுமுறையை கொண்டாடியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.