இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆபத்தான மற்றும் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளை நிராகரிப்பதாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஒன்றுபட்டு செயல்படவும் இந்தோ பசிபிக்கை தாண்டி உலகளவில் வளர்ச்சியை ஏற்படுத்த பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தவும் உறுதி எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது தெற்கு கடல் பகுதியிலும் இந்தோ பசிபிக்கிலும் தன்னிச்சையான ஆக்ரமிப்புகளை செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.