அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த எலான் மஸ்க் அந்நாட்டு அரசை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்தார்.
இதனை கடுமையாக விமர்சித்த விவேக் ராமசாமி, சீன அரசு தங்கள் மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள அமெரிக்க தொழிலதிபர்களை கைப்பாவைகளாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
விவேக் ராமசாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த எலான் மஸ்க், விவேக் ராமசாமி நம்பிக்கை அளிக்கும் வேட்பாளராக உள்ளதாக பதிவிட்டுள்ளார்.