யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஒரு சில உபாதைகளுக்கு பலனளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் முதலாவது உச்சி மாநாடு குஜராத்தில் தொடங்கியது.
முப்பது நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தொற்று நோய் அல்லாத இதர உபாதைகளுக்கு பாரம்பரிய மருத்துவத்துவ முறையை பல நாடுகள் பின்பற்றி வருவதாக கூறினார்.
உச்சி மாநாட்டில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா, இந்த சந்திப்பு மூலம் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக் கொள்ளவும், புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் வழி கிடைக்கும் என்றார்.
ஜி 20 அமைப்புக்கு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா ஏற்பாடு செய்துள்ள இந்த உச்சி மாநாட்டில் 90 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.