திருப்பதி மலை வனப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மூன்றாவதாக ஒரு சிறுத்தை சிக்கியது.
ஜூன் மாதம் மலைப்பாதையில் பாதயாத்திரையாக பெற்றோருடன் வந்த 3 வயது சிறுவனை தூக்கிச் சென்று சிறுத்தை விடுவித்த நிலையில், அதனை பிடிக்க கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டதில் ஒரு சிறுத்தை பிடிபட்டது.
கடந்த 11ஆம் தேதி அன்று சிறுமி லக்ஷிதாவை சிறுத்தை தூக்கிச் சென்று கொன்ற சம்பவத்தை அடுத்து மலைப்பாதையில் நடக்கும் பக்தர்கள் மிகுந்த அச்சமடைந்தனர். கடந்த திங்கள்கிழமை இரண்டாவது சிறுத்தை பிடிபட்ட நிலையில், இன்று மூன்றாவதாக ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.