இரண்டாம் உலகப் போரின் 78ஆம் ஆண்டு நிறைவு தினம் ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது.
போரில் உயிரிழந்த 25 லட்சம் பேரின் நினைவாக டோக்கியோவில் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னத்தில் பிரதமர் கிஷிடாவும், அரசர் நருஹிட்டோவும் அஞ்சலி செலுத்தினர்.
அதே போன்று டோக்கியோவில் உள்ள மற்றொரு நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் சிலரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இரண்டாம் உலகப்போரின் போது போர் குற்றங்களில் ஈடுபட்ட ஜப்பான் தலைவர்கள் 14 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவது அமெரிக்கா, சீனா, கொரியா போன்ற நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.