நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல் வேறு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. காண்போரை கவரும் விதமாக குடியரசு தலைவர் மாளிகை மின்னொளி வெள்ளத்தில் ஜொலித்தது. மேலும் திரிபுராவின் அகர்தலாவில் லேசர் ஒளி விளக்கு ஒளிரா ஏற்பாடு செய்து இருந்தனர்.
இதே போன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ரெயில் நிலையம் மூவர்ண விளக்குகளால் ஒளிர்ந்தது...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் கோபுரங்களிலும் மின் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது....
இதே போன்று டெல்லி ரெயில் நிலையம், டெல்லி இந்தியா கேட் , மும்பை சத்தபதி சிவாஜி ரெயில் நிலையம் ,கொல்கத்தா உயர் நீதிமன்றம் , பீகார் மாநிலம் பாட்னா தலைமை செயலகம் , டெல்லி குதுப் மினார் கோபுரம் , பெங்களூர் சட்டசபை கட்டிடம் ஆகியவற்றலும் மூவர்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டிருந்தது......
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மூவர்ண கொடிகளுடன் பொதுமக்கள் திரண்டு பேரணியாக சென்றனர்.