இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியானதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்த சிங் சுகு தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு காரணமாக சிம்லாவில் உள்ள சிவன் கோயில் இடிந்ததில், பக்தர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். இதில், 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய 25 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசம் சோலன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் அலக்நந்தா, மந்தாகிணி மற்றும் கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டேராடூனில் பெருகெடுத்த வெள்ளத்தில் கல்லூரி கட்டடம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. சேதம் தொடர்பாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு மேற்கொண்டார்