தடை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாயிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி அகமது ரசா என்பவனை மொரதாபாதில் தீவிரவாத எதிர்ப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று கமாண்டோ படை பயிற்சி பெற இருந்தவனைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பாகிஸ்தானில் அகமது பயிற்சி பெற இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரிலும் இந்த தீவிரவாதி ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 30 நாட்களாக வாட்ஸ் ஆப் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அகமதுவை பின்தொடர்ந்து வந்த ஏடிஎஸ் அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்