தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்குத் தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாகச் சந்தேகிக்கப் படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு டிரம்ப்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.