சென்னையில் 2019-இல் ஸ்மார்ட் பைக் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இ-சைக்கிள்கள் துருப்பிடித்து கேட்பாரற்று கிடப்பதாக சைக்கிள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பயனாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்களிடையே வரவேற்பு இல்லை என்றும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.