ரஷ்யாவில் நடைபெற்ற அந்நாட்டின் 327-வது கடற்படை தின கொண்டாட்டத்தில் அதிபர் புதின் பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
செயிண்ட் பீட்டர்ஸ்-பர்க் துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், போர்க் கப்பல்களில் நின்றபடி வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
கடற்கரையில், பீரங்கிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு, வானில் குண்டுமழை பொழிந்து, போர் ஒத்திகை நடத்தப்பட்டது.
பின்னர் வீரர்கள் மத்தியில் பேசிய புதின், யுத்த காலத்தில் திறமையாக செயல்பட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். பிறகு, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.