சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவைக் கூட்டத்தின் செயல் திட்டங்கள் பற்றி கடிதம் அனுப்பப்படும் போது, அரசின் ரகசியங்கள் கசியாதா என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராயபுரத்தில் அ.தி.மு.க. மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சிலருக்கு இலவசமாக தக்காளி வழங்கிய ஜெயகுமார், மற்றத்துக்கெல்லாம் நிதி ஒதுக்கும் தமிழக அரசு தக்காளி தட்டுப்பாட்டை சரி செய்ய நிதி ஒதுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.