மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் அமளிக்கு நடுவே உரையாற்றிய அவர், மணிப்பூர் பற்றி விவாதங்கள் நடத்த தயாராக உள்ளதாகவும், முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தின் உண்மை நிலையை நாட்டு மக்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமித் ஷா விளக்கம் அளித்த போதிலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களுடன் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, நிதின் கட்காரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
எனினும் எதிர்க்கட்சியினர் மழைக்கால கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட நாடாளுமன்றம் இயங்கவிடாமல் அமளியை தொடர்ந்தனர்.