கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமானங்களை இயக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியதை அடுத்து கடந்த மே மாதம் முதல் படிப்படியாக அனைத்து விமான சேவைகளையும் அந்த நிறுவனம் ரத்து செய்திருந்தது.
சிறிய இடைவேளைக்குப் பின் விமானங்களை இயக்குவதற்காக அந்நிறுவனம் முன்வைத்த திட்டத்தை விமான போக்குவரத்து இயக்குநரகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அனைத்து ஒழுங்குமுறை விதிகளையும் பூர்த்தி செய்வது, பயணிகள் சேவைக்காக பயன்படுத்தும் விமானத்தின் தகுதியை உறுதி செய்வது உள்ளிட்டவை சில முக்கிய நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளன.
விமானங்களை இயக்குவதற்கான நேர அட்டவணைக்கு டிஜிசிஏ ஒப்புதல் அளித்த பின்பே டிக்கெட் விற்பனையை தொடங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.