டெஸ்லா கார்களில் உள்ள ஆட்டோ பைலட் வசதியை மேம்படுத்துவதற்காக 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைக்கப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ பைலட் வசதி கொண்ட ஒரு டெஸ்லா கார் ஓடும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள 12 சென்ஸார்கள் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள 8 கேமராக்கள் மூலம் தினமும் சராசரியாக 19 ஆயிரம் ஜி.பி. டேட்டா திரட்டப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்திற்கு அனுப்பப்படும் இந்த டேட்டா என்-வீடியா கிராபிக்ஸ் பிராசஸருடன் கூடிய சூப்பர் கம்ப்யூட்டர்களில் சேமிக்கப்பட்டு, ஆட்டோ பைலட் வசதியை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது.
கோடிக்கணக்கான ஜி.பி டேட்டாவை சேமிக்க வேண்டி உள்ளதால் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைக்க முடிவெடுத்த எலான் மஸ்க் அதற்காக 8000 கோடி ரூபாய் ஒதுக்கியதாக தெரிவித்துள்ளார்.