மகாராஷ்டிரா சட்டப் பேரவை, பெரும் குழப்பத்துக்கு இடையே கூடியது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ் மற்றும் புதிதாக பெறுப்பேற்ற மற்றொரு துணை முதல்வர் அஜித் பவார் என அனைவரும் சென்று இருக்கையில் அமர்ந்தனர்.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இரு அணிகளாக பிளவு பட்டிருப்பதால், அவரவர் அணி கொறடாக்கள் பிறப்பித்த உத்தரவுகளால் எங்கே அமருவது என்று குழப்பமடைந்தனர். அதாவது ஆளும் கட்சி வரிசையா அல்லது எதிர்க்கட்சி வரிசையா என்பது அவர்களது குழப்பம். இதனால் பேரவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. அவையை விட்டு வெளியே வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
பேரவை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அஜித் பவார் மற்றும் அவரது தரப்பு எம்.எல்.ஏ.க்கள், இன்றும் சரத் பவாரை நேரில் சென்று சந்தித்தனர். ஆனால், அவர் பதில் ஏதும் கூறமால் அமைதி காத்ததால், சமரச முயற்சி தோல்வி அடைந்து அஜித் பவார் அணியினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.