தக்காளி விலையேற்றத்தால் இடைத்தரகர்கள் மட்டுமே பயனடைந்து வருவதாகவும், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
பா.ம.கவின் 35ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு சென்னை தரமணியில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர், பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு விற்ற தக்காளி இப்போது 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது, குளிர்பதனக் கிடங்குகளை அமைத்து விளை பொருட்களை சேகரித்து வைத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா என்று அன்புமணி வினவியுள்ளார்.