இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது சிறிய இல்லத்தில் ஓய்வெடுக்க சென்ற போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவக் குழுவினர் அவர் உடல்நிலையைக் கண்காணித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் மாதம் இதே போன்று உடல்நல பாதிப்புக்காக நெதன்யாகு சிகிச்சை பெற்றார் .