ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ரஷ்ய இந்திய கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவுக்குத்தர இந்தியா ஒப்புக் கொண்டால் அது இருநாட்டு ராணுவ பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் போருக்குப் பின்னர் இதுகுறித்த ஒப்பந்தம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைக்கு சந்தையாக ரஷ்யா திகழும் என்று பிரம்மோஸ் ஏவுகணை முதன்மை நிர்வாக அதிகாரியும் எம்டியுமான அதுல் தினகர் ரானே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் உள்ள ஏவுகணையை விடவும் பிரம்மோஸ் மேம்படுத்தப்பட்ட நவீன ரக ஏவுகணையாகும்.