புதுச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைக்கால் நகர் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் தனியார் தங்கும் விடுதியில் மறைவிடத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்தச் சோதனை நடைபெற்றது.
சில விடுதிகளில் சோதனையின் போது விடுதியில் தங்க வரும் வெளி மாநிலத்தவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை சான்று வாங்க வேண்டும் என காவல்துறையின் அறிவிப்பை கடைபிடிக்காதது தெரியவந்தது.
இதையடுத்து வாடிக்கையாளர்களிடம் அடையாளச் சான்று வாங்கவேண்டும் என்று காவலர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து விடுதிகளிலுள்ள அறைகளில் சுவிட்ச் போர்டு, ஏ.சி சுவிட்ச், நிலைக்கண்ணாடி பிரேம்கள் மற்றும் அறைகளிலுள்ள நான்கு புறமும் சோதனை செய்தனர்.