ஆன்லைன் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹரியானாவில் செயற்கை நுண்ணறிவு, குற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பேசிய அவர், உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, பல நாடுகள் இணையத் தாக்குதலுக்கு எவ்வாறு ஆளாகி உள்ளன என்பதை நினைவு கூர்ந்தார்.
இதன் விளைவாக 2019 மற்றும் 2023 க்கு இடையில் சுமார் 5.2 டிரில்லியன் டாலர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
எந்தவொரு நாடும் அல்லது அமைப்பும் இணைய அச்சுறுத்தல்களை தனிமையில் எதிர்த்துப் போராட முடியாது என்று குறிப்பிட்ட அவர், இதனை எதிர்க்க புவியியல் எல்லைகளுக்கு அப்பாலும் போராட வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.