கொசோவோ நாட்டின் நாடாளுமன்றதில் ஏற்பட்ட பெரும் அமளியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அந்நாட்டு வடக்குப் பகுதியில் செர்பிய இனத்தவர் உடனான பதற்றத்தைத் தணிப்பது குறித்து பிரதமர் அல்பின் குர்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்கட்சி எம்பி ஒருவர் தான் வைத்திருந்த தண்ணீரை பிரதமர் மீது விசிறியடித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் ஒன்று கூடி, மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இந்த சண்டையின் போது ஒரு எம்பிக்கு முகத்தில் குத்து விழுந்தது. இதையடுத்து நாடாளுமன்ற போலீசார் வரவழைக்கப்பட்டு அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.