இதயத்தில் 40 சதவீத அடைப்பு என்பது பொதுவாக இருக்கக் கூடியது தான் என்று அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் 2-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.
அதில், அமலாக்கத் துறை தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காணொலி மூலம் ஆஜராகி, வாதங்களை முன் வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில், அமலாக்கத் துறைக்கு சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்ட துஷார் மேத்தா, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டாலும் புலன் விசாரணை செய்வது தங்கள் கடமை என்று கூறினார். காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் கடமையை அமலாக்கத்துறைக்கு மறுப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான் என்று குறிப்பிட்ட துஷார் மேத்தா, அமலாக்கத்துறை விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூற முடியாது என்றார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது என்று கூறிய துஷார் மேத்தா, அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த கடுமையான பிரிவுகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரியது உயர்நீதிமன்ற உத்தரவை மீறியது அல்ல என்று கூறிய துஷார் மேத்தா, காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தான் எதிர்ப்பதாகவும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கார்த்திகேயன், அனுமதி பெற்ற பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் அமலாக்க துறை தான் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் நீதிமன்ற நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதாக துஷார் மேத்தா விளக்கமளித்தார். செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதில் இருந்தே நீதிமன்ற காவலில் இருப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் துஷார் மேத்தா தெரிவித்தார்.
துஷார் மேத்தா வாதத்தை நிறைவு செய்ததை அடுத்து பதில் வாதத்துக்காக உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தது.
காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு என்பது, ஜாமீன் வழங்க மறுத்தது தான் எனவும், அது காவலில் எடுத்து விசாரிக்க கோர முடியாது என்பதல்ல என, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.
மேலுல், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரியது என்பது, உயர்நீதிமன்ற உத்தரவை மீறியது அல்ல என்று கூறிய துஷார் மேத்தா, காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தான் எதிர்ப்பதாகவும் வாதிட்டார்.
அப்போது, காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்.? நீதிபதி கார்த்திக்கேயன் கேள்வி எழுப்பினார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் அமலாக்க துறை தான் பொறுப்பேற்க வேண்டி வரும் என்றும், அதனால், நீதிமன்ற நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதாகவும், துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்பது உச்சநீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டதாக துஷார் மேத்தா கூறினார்.