ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, அமர்நாத் யாத்திரை 3வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
ராம்பன் மாவட்டத்தில் தொடரும் கனமழையால் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால், பாதுகாப்பு கருதி, ஜம்முவில் முகாமில் இருந்து யாத்ரீகர்கள் செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால், யாத்திரைக்குச் சென்ற சுமார் 6 ஆயிரம் பக்தர்கள், நிவாஸ் சந்திரகோட் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பூஞ்ச் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் இரண்டு பேர், முகல் சாலை அருகே ஆற்றைக் கடக்கும்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.