மெக்சிகோவில் கடல் வழியாக விரைவு படகுகள் மூலமாக கடத்தப்பட்ட 2,400 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
தெற்கு குரேரோ பசிபிக் கடற்கரையில் 3 படகுகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதை அறிந்த கடற்படையினர், அதில் ஒரு படகை 7 மணி நேரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இதையறிந்த கடத்தல்காரர்கள் போதைப்பொருளுடன் படகுகளை கரையோரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த மெக்சிகோ கடற்படை அதிகாரிகள், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.