அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானி, மும்பையில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் ஆஜரானார்.
அவரிடம் அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்டில், இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள 814 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கணக்கில் காட்டப்படாத பணத்தில் 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி அம்பானிக்கு கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ் மற்றும் அபராதத் தொகைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
யெஸ் வங்கி தொடர்பான பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறையினர் கடந்த 2020 ம் ஆண்டில் விசாரணை நடத்தியுள்ளனர்.