இந்தியாவும் சீனாவும் பாங்காங் சோ ஏரிக்கு அருகில் உள்கட்டமைப்பை அதிகரித்து வருகின்றன.
கடந்த 2020 ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.
எல்லையில் அமைதியை ஏற்படுத்த அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, இந்நிலையில், ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்கட்டமைப்பை இருநாட்டு ராணுவத்தினரும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் ஒரு பாலத்தை முடிக்க சீனா நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மறுபுறம், இந்தியா தனது வடக்கு கரையில் ஒரு சாலையை அமைக்கிறது. உள்கட்டமைப்பு, சாலை நெட்வொர்க்குகள், மேம்பட்ட ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் மைதானங்கள் , சோலார் பேனல்கள், போன்றவையும் இருதரப்பிலும் அதிகப்படுத்தப்படுகின்றன