காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தால் கனடாவுடனான நட்புறவு பாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு இந்திய அதிகாரிகள் காரணம் என்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கனடா, இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகள் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இடம் தர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.