நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
9ம் தேதி தொடங்கி 13 ம் தேதி வரையில் அவர் இங்கிலாந்து, லித்துவேனியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இளவரசர் சார்லஸ், பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பிறகு லித்துவேனியாவில் 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெறும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கிறார். இறுதியாக பின்லாந்தில் நடைபெறும் அமெரிக்க-நார்டிக் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.