தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவாருக்கும் அவருடைய உறவினர் அஜித்பவாருக்கும் இடையே பிளவு ஏற்பட்டதையடுத்து, அஜித் பவார் தமது ஆதரவான எம்.எல்.ஏக்கள் 40 பேருடன் பாஜகவில் இணைந்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் சரத்பவாருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். கடந்த காலத்தில் 1999ம் ஆண்டில் இதே போல்தான் காங்கிரஸில் இருந்து பிரிந்த சரத்பவார் தேசிய வாத காங்கிரஸ் என்று புதிய கட்சியை ஆரம்பித்தார்.
இக்கட்டான இச்சூழலில் சோனியா ராகுல் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவாருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.