மணிப்பூர் வன்முறைக்கு பின்னால் வெளிநாட்டு சதி இருப்பதாக முதலமைச்சர் பைரன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கூக்கி, மெய்த்தி சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதலால் வெடித்த வன்முறை 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங், மணிப்பூர் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும், வன்முறைக்கு பின்னால் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டுடன் மணிப்பூர் மாநிலம் எல்லையை பகிர்ந்து கொள்வதையும், சீனா தங்கள் மாநிலத்திற்கு அருகே உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர் வன்முறை சம்பவங்களால் மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதியதால் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும், ஆனால் மக்களின் ஆதரவை கண்டு முடிவை மாற்றிக்கொண்டதாகவும் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.