பிரான்ஸ் முழுவதும் வன்முறை தலைவிரித்தாடுவதால் தமது ஜெர்மனி பயணத்தை அதிபர் இமானுவல் மேக்ரன் ஒத்திவைத்துள்ளார்.
இது குறித்து தொலைபேசி மூலமாக ஜெர்மன் அதிபர் ஸ்டெய்ன்மெயரிடம் பேசிய தமது நாட்டின் தற்போதைய சூழலை விவரித்தார். 17 வயது இளைஞர் ஒருவர் போலீஸ்காரரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து பிரான்சின் பல பகுதிகளில் கடந்த 5 நாட்களாக வன்முறை கட்டுப்படாமல் உள்ளது.
பல இடங்களில் போலீசாருக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு மோதல்கள் ஏற்பட்டு வாகனங்கள் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
சுமார் 45 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக 1300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.