அமெரிக்காவுடன் போலந்து மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், 14 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகள் போலந்துக்கு அனுப்பப்பட்டன.
ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்கும் முயற்சியாக, நாட்டின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த, போலந்து அரசு 250 அதிநவீன ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை வழங்குமாறு அமெரிக்காவுடன் கடந்தாண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன் படி, முதற்கட்டமாக 14 ஆப்ராம்ஸ் டாங்கிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த டாங்கிகளை இயக்குவது பற்றி போலந்து இராணுவத்தினருக்கு அமெரிக்க இராணுவம் ஏற்கனவே பயிற்சி அளித்திருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.