அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மக்கள் நீர்நிலைகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
டெக்சாஸில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் அவதிக்குள்ளான மக்கள், வீடு மற்றும் பொதுவெளிகளில் உள்ள நீச்சல் குளங்களில் குளித்து வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.
அரிசோனா, டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் ஜூலை 4ம் தேதி வரை வெப்பநிலை அதிகரித்திருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸில் உள்ள பிக் பெண்ட் தேசிய பூங்காவில் 119 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் நடைபயணம் மேற்கொண்டிருந்த 14 வயது சிறுவன், உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.