பக்தர்களின் விருப்பப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான ஆவணங்களை திரட்டி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படும் தீட்சிதர்கள், விலை உயர்ந்த நகைகளை தணிக்கை செய்யக் கூட அனுமதிப்பதில்லை என தெரிவித்தார்.
நடராஜர் கோயிலை தங்களின் சொந்த நிறுவனம் போல் தீட்சிதர்கள் நினைத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற தீர்ப்பின் படி கனகசபையின் மீது நின்று பக்தர்களை சாமி கும்பிட அனுமதித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.