முழுவதும் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நூறு சதவீதம் எத்தனாலில் இயங்கும் வகையிலான இருசக்கர வாகனங்களை இந்திய சாலைகளில் பயன்படுத்தும் வகையில் பஜாஜ், டி.வி.எஸ்., ஹீரோ போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளதாக கூறினார்.
அவை விரைவில் சந்தைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். டொயோட்டா நிறுவனம் எத்தனால் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கேம்ரி ரக ஹைப்ரிட் காரை ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்த கட்கரி, அந்த கார் 100 சதவீதம் எத்தனாலில் இயங்குவதுடன், ஒவ்வொரு லிட்டர் எத்தனால் மூலம் காரில் உள்ள பேட்டரி 40 சதவீதம் சார்ஜிங் ஆகும் என்றும் கூறினார்.
இதன் மூலம் எரிபொருள் செலவு பெட்ரோலை ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருக்கும் என்றும் கட்கரி தெரிவித்தார்.