பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்தியது ஒரு 'ஜோக்' கூட்டம் என விமர்சித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், 2024ம் ஆண்டு தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவில் மற்றும் ஓடந்துறை விநாயகர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தார்மீக அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.