தாய்லாந்தில் தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவர் உயிரிழந்தார். தலைநகர் பாங்காக்கில் உள்ள பள்ளி ஒன்றில் தீ பாதுகாப்பு ஒத்திகை நடத்திக் காட்டப்பட்டது.
அப்போது, தீயணைப்புக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கிக் காட்டப்பட்டது. அதே நேரத்தில் பல தீயணைப்புக் கருவிகள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது ஒரு கருவி திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அருகில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவன் ஒருவன் 30 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து உயிரிழந்தார். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. வாயு நிரப்பப்பட்ட தீயணைக்கும் சிலிண்டர் வெகுநேரம் சூரிய வெப்பத்தில் இருந்ததால் அழுத்தம் அதிகரித்து வெடித்து சிதறியதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.