பாட்னாவில் நடைபெற்றது வெறும் ஃபோட்டோ ஷுட் நிகழ்வுதான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, எதிர்க்கட்சியினரால் எப்போதும் ஒற்றுமையாக செயல்பட முடியாது என்று கூறினார்.
அப்படியே அது சாத்தியமானாலும் 2024ஆம் ஆண்டு தேர்தலில், 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மோடி வந்து அவர்கள் முன் நிற்பார் என்றும் அமித் ஷா கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 12 லட்சம் கோடி
ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது நரேந்திர மோடி அரசு ஊழலுக்கு எதிரான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.