அமெரிக்காவிலேயே புதுப்பிக்கத் தக்க எச் 1 பி விசாக்களை அறிமுகப்படுத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் ஹெச்-1பி எனப்படும் விசாவை புதுப்பிக்க வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள், அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு 3 ஆண்டு கால முடிவிலும் இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள பாஸ்போர்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தேதியை ‘ஸ்டாம்பிங்’ செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இந்த ‘ஸ்டாம்பிங்’ பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிக்காததால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் மீண்டும் வேலை நீடிப்பு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து விசாவை புதுப்பித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
மேற்கொண்டு வரும் நிலையில், விசா புதுப்பிக்கும் முறை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற செய்தி இந்திய பணியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.