பிரதமரின் அமெரிக்கப் பயணம் மூலம் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கனிமங்கள் போன்ற துறைகளில் இருநாடுகள் இடையே ஒத்துழைப்பு வலுவடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆராய்ச்சியை மட்டுமல்லாமல், வணிக வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.
உலக நாடுகள் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் நிலையில், செமிக்கண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது பயன்பாட்டுக்கான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில், அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்பு கட்டமைப்பு தற்போது சாத்தியமாகிவுள்ளதாக ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.