சூடானில், 3 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் முன்னே ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
அந்நாட்டின் உளவுத்துறை அமைச்சகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து தலைநகர் கார்டூமில் இயங்கிவந்த 2 துணை ராணுவ நிலைகள் மீது ராணுவம் வான் தாக்குதல் நிகழ்த்தியது.
அதை தொடர்ந்து குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இருதரப்பினருக்கும் இடையே நாள் முழுவதும் துப்பாக்கி சண்டை நடந்தது. பல நாட்களுக்கு முன்பே குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்கனவே அங்கிருந்து பெரும்பகுதி மக்கள் வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது