ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் கோழி இறைச்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய சிங்கப்பூரைத் தொடர்ந்து அமெரிக்க அரசும் தற்போது அனுமதி அளித்துள்ளது.
கோழியைக் கொல்லாமல், அதன் இறைச்சியிலோ அல்லது கருமுட்டையில் இருந்தோ பிரித்தெடுக்கப்படும் செல்களுக்கு ஊட்டச்சத்து செலுத்தி உருவாக்கப்படும் இந்த இறைச்சி முதன்முதலில் சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அமெரிக்க அரசும் அதனை உற்பத்தி செய்து விற்க 2 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
விற்கும் போது, அந்த இறைச்சி ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களிடம் தெரியப்படுத்துமாறு உத்திரவிடப்பட்டுள்ளது. கொழுப்பு, எலும்பு போன்றவை இல்லாத இந்த இறைச்சிக்கான உற்பத்தி செலவு அதிகம் என்ற போதிலும் அதனை வாங்க நட்சத்திர விடுதிகள் ஆர்வம் காட்டி உள்ளன.