ஹைதராபாத் நகரில் 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
எல்.பி. நகர் பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளதால், விரைவில் பாலத்தை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பாலத்தின் அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிய 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாலம் இடிந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.