அமெரிக்காவில் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர்மூழ்கிக் கப்பலை அந்நாட்டு கடலோர காவல்படை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தது.
கடலோர காவல்படை படகில் சென்ற வீரர்கள் நடுக்கடலில் நீர்மூழ்கிக் கப்பலின் அருகே சென்றதும் அதன் மீது ஏறி, கடத்தல்காரர்களை கைது செய்தனர்.
நீர்மூழ்கி கப்பலில் இருந்து 232 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.