சின்ன திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது கணவர் மிரட்டுவதாக மாங்காடு மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்த இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தினேஷ் தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக நடிகை ரச்சிதா போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான தினேஷ் ரட்சிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றுள்ளார். இந்த புகார் தொடர்பாக ரச்சிதாRachitha Mahalakshmiவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.