தனியார் கோசிங் சென்டர்களில் அதிகளவு கட்டணம் செலுத்தி குழந்தைகள் படிப்பதை தடுக்கும் முயற்சியாக, அரசு பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் கேட்க தென் கொரிய அரசு தடை விதித்துள்ளது.
அந்நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் மாணவர்கள் கல்லூரி நுழைவுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர். அதில் கேட்கப்படும் கடினமான கேள்விகளுக்கு, அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களால் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகளவு பணம் செலவிட்டு தனியார் கோசிங் செண்டர்களை அவர்கள் நாடிவருகின்றனர். இதனால், தனியார் கோசிங் செண்டர்களே செழிப்படைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர், இனி அரசு பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை நுழைவுத்தேர்வில் கேட்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
மன அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதில் உலகளவில் தென் கொரியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.