ஜபோரிஜியா அணு உலையின் பாதுகாப்பில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.
கக்கோவ்கா அணை ரஷ்ய படையினரால் வெடிவைத்து தகர்க்கப்பட்டதையடுத்து, அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறியது.
ஜபோரிஜியா அணுஉலையின் குளர்ச்சிக்கான தண்ணீர் கக்கோவ்கா அணையில் இருந்து பெறப்பட்டு வந்த நிலையில், அணு உலைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அணுஉலையின் குளிர்ச்சிக்கு தேவையான தண்ணீர் அருகில் உள்ள கிணறுகளில் இருந்து பெறப்படுவதாகவும், இதனால் அணு உலைக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் ஜபோரிஜியா ஆளுநர் யூரி மலாஷ்கோ தெரிவித்துள்ளார்.